100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த தலைவன் தலைவி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தலைவன் தலைவி
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தலைவன் தலைவி. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன்.
சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க தீபா, செம்பன் வினோத், ஆர்.கே. சுரேஷ், மைனா நந்தினி, ரோஷினி ஹரிப்ரியன், காளி வெங்கட் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று திரையரங்கில் வெற்றி நடைபோட்ட தலைவன் தலைவி தற்போது OTT-யில் வெளியாகியுள்ளது.
100 கோடி
இந்த நிலையில், தலைவன் தலைவி படம் ரூ. 100 கோடியை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மகாராஜா படம் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், இந்த ஆண்டு தலைவன் தலைவி ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.
Families’ favourite #ThalaivanThalaivii marks 100 CR worldwide gross with your endless love & support ❤️🫶@VijaySethuOffl @MenenNithya @pandiraaj_dir @iYogiBabu@Music_Santhosh @SathyaJyothi @Lyricist_Vivek @thinkmusicindia @studio9_suresh@Roshni_offl @kaaliactor @MynaNandhini… pic.twitter.com/VdDkK7opoL
— Sathya Jyothi Films (@SathyaJyothi) August 24, 2025