மூன்று நாட்களில் வசூல் வாரிக்குவிக்கும் தலைவன் தலைவி.. எவ்வளவு தெரியுமா
தலைவன் தலைவி
கடந்த வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் வசூல் வாரிக்குவித்து வருகிறது தலைவன் தலைவி. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் இணைந்து நடித்திருந்தனர்.

சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் தீபா, செம்பன் வினோத், ரோஷினி ஹரிப்ரியன், சரவணன், மைனா நந்தினி, காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ், வினோத் சாகர், அருள்தாஸ், ஜானகி சுரேஷ், சென்றாயன் என மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
மூன்று நாட்கள் வசூல்
மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று பட்டைய கிளப்பி வரும் தலைவன் தலைவி திரைப்படம் முதல் மூன்று நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது.

இந்த நிலையில், உலகளவில் மூன்று நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தலைவன் தலைவி படம் உலகளவில் மூன்று நாட்களில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri