7 நாட்களில் தலைவன் தலைவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
தலைவன் தலைவி
மக்கள் மனதில் இடம்பிடித்த முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாண்டிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் தலைவன் தலைவி.
கணவன் மனைவி உறவை மையமாக கொண்டு உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

மேலும் செம்பன் வினோத், தீபா, சரவணன், ரோஷினி ஹரிப்ரியன், காளி வெங்கட், மைனா நந்தினி, ஆர்.கே. சுரேஷ் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
பாக்ஸ் ஆபிஸ்
7 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் தலைவன் தலைவி படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், 7 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 52 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu