2 நாட்களில் தலைவன் தலைவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
தலைவன் தலைவி
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - நித்யா மேனன் இணைந்து நடிக்க உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் தலைவன் தலைவி.
இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

துணை கதாபாத்திரங்களில் செம்பன் வினோத், சரவணன், தீபா, ரோஷினி ஹரிப்ரியன், யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். கடந்த 25ம் தேதி வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டைய கிளப்பி வரும் தலைவன் தலைவி திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் 2 நாட்களில் உலகளவில் ரூ. 17 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

You May Like This Video
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri