தலைவன் தலைவி படம் வெளிநாட்டில் மட்டுமே எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ
தலைவன் தலைவி
சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் தலைவன் தலைவி. விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடிக்க இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார்.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் தலைவன் தலைவி படம், இயக்குநர் பாண்டிராஜுக்கு கம் பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக பட்டைய கிளப்பி வரும் தலைவன் தலைவி திரைப்படத்தின் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
அதுவும் வெளிநாட்டில் இப்படம் நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி, தலைவன் தலைவி திரைப்படம் நான்கு நாட்களில் வெளிநாட்டில் மட்டுமே ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதோ அந்த அறிவிப்பு..
Audience verithanam loading daily!
— Sathya Jyothi Films (@SathyaJyothi) July 29, 2025
Thank you for the unstoppable support 🙌❤️ #blockbusterhit@VijaySethuOffl @MenenNithya @pandiraaj_dir @iYogiBabu @Music_Santhosh @Lyricist_Vivek @thinkmusicindia @studio9_suresh @Roshni_offl @kaaliactor @MynaNandhini @ActorMuthukumar pic.twitter.com/sIe4Yxq4Sj