தலைவர் 169 படத்தின் புரளிகளுக்கு முற்றுப்புள்ளி ! புதிதாக படத்தில் இணையும் டாப் நடிகர்..
தலைவர் 169 படத்தில் டாப் நடிகர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அவரின் 169-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கப்படாத நிலையில் அப்படம் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.
அதன்படி அப்படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதையில் பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான பிஸ்ட் திரைப்படம் பெரியளவில் சொதப்பியதால், சன் பிக்சர்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் பரவின. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை.
இதனிடையே தற்போது இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் எந்த விதத்திலும் பணியாற்றவில்லை என்றும், இயக்குநர் நெல்சன் தான் இப்படத்தின் கதை வேலையில் ஈடுப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தான் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

விக்ரம் படத்தின் வெறித்தனமான டைட்டில் பாடல் காப்பியா.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ இதோ