சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படத்தை இயக்குவது குறித்து இயக்குனர் தேசிங் பெரியசாமி வெளியிட்ட பதிவு !

Desingh Periyasamy rajinikanth thalaivar 169
By Jeeva May 04, 2021 07:45 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து தலைவர் 169 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும், அப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் அல்லது தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இதனிடையே தற்போது இயக்குனர் தேசிங் பெரியசாமி இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "எனது அடுத்த திரைப்படம் குறித்து பரவி வரும் தகவல் உண்மையல்ல, இது குறித்து விரைவில் அறிவிக்கிறேன். உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.

  இதன் மூலம் தலைவர் 169 படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது, அப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US