நாளை வெளியாகவுள்ள தலைவர் 169 அப்டேட் ! சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த, கலவையான விமர்சனங்களை பெற்ற அப்படம் பாக்ஸ் ஆபிஸில் சொதப்பியது.
அப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அவரின் 169 திரைப்படம் உருவாகவுள்ளது. ஏற்கனவே அப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது.
ஆனால் அதனை அப்படத்தின் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகமல் இருந்தன, இடையில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படமும் வெளியாகி வரவேற்பை பெற தவறியது.
இந்நிலையில் தற்போது தலைவர் 169 படத்தின் புதிய அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாக இருக்கிறது. இதனை மறைமுகமாக சன் பிக்சர்ஸ் தற்போது ஒரு சிகப்பு நிற ஸ்டார் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்து இருக்கிறது.
Update Tomorrow at 11am! pic.twitter.com/s4a4bi1HoR
— Sun Pictures (@sunpictures) June 16, 2022