தலைவர் 169 படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது.. வெளிவந்த புதிய அப்டேட்
தலைவர் 169
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் தலைவர் 169.
சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
மேலும், இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்கும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போனது.
படப்பிடிப்பு அப்டேட்
ஆனால், தற்போது ஏற்கனவே முடிவு செய்தது போல், ஜூலை மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து, தலைவர் 169 திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.