தாமதம் ஆகும் ரஜினி - நெல்சன் படம்! காரணம் இதுதான்
தற்போது பீஸ்ட் படத்தின் ப்ரோமோஷனில் பிசியாக இருக்கிறார் நெல்சன் திலீப்குமார். இந்த படம் ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் அடுத்து நெல்சன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கூட்டணி சேர்கிறார்.
ரஜினி 169
கடந்த பிப்ரவரியில் ரஜினி 169 படம் பற்றிய அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் அனிருத் இசையமைக்கிறார்.
தலைவர் 169 என தற்காலிகமாக தான் பெயர் சூட்டி இருக்கின்றனர். ரஜினிக்கு நெல்சன் எழுதிய கதை எப்படி இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

ஷூட்டிங் தொடங்க தாமதம்
இந்நிலையில் தலைவர் 169 படத்தின் ஷூட்டிங் இந்த வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தான் தொடங்கும் என தெரிகிறது. சமீபத்தில் நெல்சன் அளித்த ஒரு பேட்டியில் அதை உறுதி செய்து இருக்கிறார்.
பீஸ்ட் முடித்திருக்கும் நிலையில், ரஜினி படத்திற்காக முதற்கட்ட பணிகள் முடிக்க நேரம் ஆகும் என்பதால் தான் இந்த தாமதம். மேலும் ரஜினி ஷூட்டிங் தொடங்கும் முன்பு அமெரிக்காவுக்கு சென்று வர இருக்கிறார்.
இந்த காரணங்களுக்காக தான் ரஜினி 169 படத்தின் ஷூட்டிங் இன்னும் பல மாதங்களுக்கு தள்ளிபோய் இருக்கிறது.