தலைவர் 170 படத்தின் First லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா.. இதோ லேட்டஸ்ட் அப்டேட்
தலைவர் 170
ரஜினிகாந்த் தற்போது TJ ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
First லுக்
இந்நிலையில், தலைவர் 170 படத்தின் First லுக் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் First லுக் அடுத்த மாதம் ரஜினியின் பிறந்தநாள் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.
அதே நாளில் லால் சலாம் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 171 படத்தின் அப்டேட் கூட ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டிப்பாக டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்து காத்திருக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.