LCU-வில் இணைவாரா ரஜினிகாந்த்.. தலைவர் 171 படத்திற்காக லோகேஷ் போடப்போகும் திட்டம் என்ன
தலைவர் 170
ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை தொடர்ந்து TJ ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் தான் தலைவர் 170. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
இந்த சமயத்தில் திடீரென அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என சன் பிச்சர்ஸ் நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால் ரசிகர்கள் செம மகிழ்ச்சியில் உள்ளனர். அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும், கைதி, விக்ரம், லியோ படங்களை தொடர்ந்து லோகேஷ் இயக்கும் தலைவர் 171 படத்திலும் அன்பு அறிவு தான் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ்.
LCU
இந்நிலையில், அனைவரின் மத்தியிலும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. ரஜினியின் தலைவர் 171 படம் லோகேஷின் LCUவில் இணையுமா என்று. இதுகுறித்து கைதி படத்தின் தயாரிப்பாளர் போட்ட ட்விட்டில் 'The universe is with you' என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வார்த்தையை எதை குறிப்பிட்டு அவர் பதிவு செய்துள்ளார் என தெரியவில்லை. ஆனால், LCUவை குறிப்பிட்டு தான் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கூறியுள்ளார் என்கின்றனர். மற்றொரு புறம் இது LCUவில் வரவே வராது, இப்படத்தை தனி கதைக்களத்தில் அமைக்கும்படி லோகேஷிடம் கூறினாராம் ரஜினிகாந்த்.

இதனால் தலைவர் 171 LCUவில் இல்லை என்றும் கூறி வருகிறார்கள். படத்தின் அறிவிப்பு மட்டும் தான் வெளியாகியுள்ளது. இனி எவ்வளவு விஷயங்கள் உள்ளன, பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri