தலைவர் 171 படத்தின் தலைப்பு இதுதானா.. இணையத்தில் லீக், LCU படமா
தலைவர் 171
ரஜினிகாந்த் முதல் முறையாக லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்துள்ள திரைப்படம் தலைவர் 171. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் First லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்த நிலையில், டைட்டில் டீசர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளிவரவுள்ளது. வழக்கம் போல் லோகேஷ் ஸ்டைலில் மாஸான டீசர் வெளிவரும் என எதிர்பார்க்கின்றனர்.
இப்படத்தில் இதுவரை பார்க்காத ரஜினியை நாம் அனைவரும் பார்ப்போம் என்றும், அதற்கான வேலைகள் நடந்து வருகிறார் என்றும் லோகேஷ் கூறியிருந்தார்.
தலைப்பு இதுதானா
இந்த நிலையில், தலைவர் 171 படத்தின் தலைப்பு இதுதான் என கூறி செய்தி ஒன்று உலா வருகிறது. அதன்படி, ரஜினி - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் தலைவர் 171 படத்திற்கு 'Eagle' என தலைப்பு வைத்துள்ளார்களாம்.
Eagle என தலைப்பு இருப்பதால் இது LCU-வில் இணையுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை. ஏப்ரல் 22 வரை பொறுத்திருந்து பார்ப்போம், லோகேஷ் வேறு ஏதேனும் சர்ப்ரைஸ் வைத்திருக்கிறாரா என்று.