லோகேஷ் கனகராஜ் - ரஜினி படத்தின் வில்லன் இவர் தானா..! தலைவர் 171 வேற லெவல் சம்பவம் தான்
தலைவர் 171
லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படம் தலைவர் 171. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் லோகேஷ் முதல் முறையாக கைகோர்த்துள்ளார்.
சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் கைதி, விக்ரம், லியோ என லோகேஷின் படங்களில் பணிபுரிந்து அன்பு, அறிவு தான் தலைவர் 171 படத்திலும் ஸ்டண்ட் மாஸ்டர்களாக கமிட் ஆகியுள்ளனர்.

கண்டிப்பாக இப்படம் தன்னுடைய இயக்கத்தில் ஒரு வித்தியாசமான முயற்சியாக இருக்கும் என லோகேஷ் கூறியுள்ளார். இதனால் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வில்லன் அப்டேட்
இந்நிலையில் தளபதி 171 படத்தின் வில்லன் குறித்து செம மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிக்கவுள்ளாராம்.

இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் கூறப்படுகிறது. ஏற்கனவே ’விக்ரம்’ படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்திலும் பிரித்விராஜ் தான் முதன் முதலில் நடிக்கவிருந்தார்.
ஆனால், சில காரணங்களால் நடிக்க முடியாமல் போய்விட்டது என பிரித்விராஜ் கூறியிருந்தார். இதனால் கண்டிப்பாக தலைவர் 171 படத்தில் பிரித்விராஜ் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கவுள்ள நிலையில், அதற்கு முன் வில்லன் ரோல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri