ரஜினிக்கு வில்லனாக நடிக்க போகும் முன்னணி ஹீரோ.. தலைவர் 171ல் லோகேஷ் கனகராஜின் மாஸ் சம்பவம்
தலைவர் 171
லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தலைவர் 171 படத்தை இயக்க போகிறார். சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி என்பதால் படத்தின் மீது தற்போதே அதிக எதிர்பார்ப்பு வந்துவிட்டது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி அல்லது ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில் படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கப்போவதாக தொடர்ந்து அப்டேட் வெளியாகி கொண்டு இருக்கும் நிலையில், படத்தின் வில்லன் குறித்து லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது.
வில்லன் அப்டேட்
அதன்படி, இப்படத்தில் வில்லன் ரோலில் நடிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் மற்றும் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி மீண்டும் தலைவர் 171 படத்தில் நடிப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒரு வேலை இந்த கூட்டணி அமைந்தால் இது ரஜினியுடன் விஜய் சேதுபதி பேட்ட படத்திற்கு பின் இரண்டாவது முறையாக கைகோர்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan
