ரஜினி படத்தில் இணையும் இரண்டு முன்னணி நடிகைகள்.. லேட்டஸ்ட் தகவல்
ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

ஜெயிலர் 2 படத்தை முடித்த கையோடு இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 173வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்க அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினி173 படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் கமிட்டாகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூஜா ஹெக்டே - பிரியங்கா
அதில் ஒருவர் நடிகை பிரியங்கா மோகன், மற்றொருவர் நடிகை பூஜா ஹெக்டே என கூறப்படுகிறது. பூஜா ஹெக்டே ஏற்கனவே ரஜினியின் கூலி திரைப்படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடி இருந்தார். ஆனால், இவை யாவும் தற்போது திரை வட்டாரத்தில் உலா வரும் தகவல் மட்டுமே. அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகிறதா என்று.

தனது 173வது திரைப்படத்தை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த், கமல் ஹாசனுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இது ரஜினியின் 174வது படமாகும். இப்படத்தை நெல்சன் இயக்க ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. நாளை இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகும் என என்பது குறிப்பிடத்தக்கது.
ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
பூமிக்கு திரும்பிய Soyuz MS -28 விண்கலம்: 241 நாட்கள் வெற்றிகரமாக முடிந்த விண்வெளி பயணம் News Lankasri
தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu