10 நாட்களில் தலைவர் தம்பி தலைமையில் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
தலைவர் தம்பி தலைமையில்
தமிழ் சினிமாவிற்கு பல தரமான படங்களை கொடுத்தவர் நடிகர் ஜீவா. இவர் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த படம் தலைவர் தம்பி தலைமையில்.
இயக்குநர் நிதீஷ் சஹதேவ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் மலையாளத்தில் வெளியான Falimy எனும் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் ரேஸில் இணைந்த தலைவர் தம்பி தலைமையில் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் வசூலில் முதல் நாளில் இருந்தே பட்டையை கிளப்பி வருகிறது.
வசூல்
இந்த நிலையில், 10 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள தலைவர் தம்பி தலைமையில் படம் உலகளவில் ரூ. 31 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
