வசூலில் பட்டையை கிளப்பும் தலைவர் தம்பி தலைமையில்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
ஜீவா
தமிழ் சினிமாவில் Underrated நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜீவா. ராம், கற்றது தமிழ், ஜிப்ஸி, ரௌத்திரம் என பல தரமான படங்கள் கொடுத்தும் அவருக்கு தரவேண்டிய சரியான அங்கீகாரத்தை தமிழ் சினிமா தரவில்லை.

ஆனாலும், தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு படங்களில் நடித்து வருகிறார்.
தலைவர் தம்பி தலைமையில்
அப்படி, ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் படம்தான் தலைவர் தம்பி தலைமையில். மலையாள இயக்குநர் நிதேஷ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா ஆகியோர் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் இதுவரை மூன்று நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த நிலையில், மூன்று நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 11+ கோடி வசூல் செய்துள்ளது.