தலைவர் தம்பி தலைமையில் படத்தின் முதல் நாள் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்
தலைவர் தம்பி தமையில்
தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுக்கும் நடிகர்களில் ஒருவர் ஜீவா. இவர் நடிப்பில் உருவாகி ஜனவரி 30ஆம் தேதி வெளிவரவிருந்த படம் தலைவர் தம்பி தமையில்.

ஆனால், ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாத காரணத்தினால், ஜனவரி 15ஆம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டனர். அதன்படியே படத்தை வெளியிட்டு படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
இப்படத்தை மலையாள இயக்குநர் நிதேஷ் சஹாதேவ் இயக்கியிருந்தார். இப்படத்தில் இளவரசு, தம்பி ராமையா, பிரார்த்தனா நாதன், ஜென்சன் என பலரும் நடித்துள்ளனர்.
முதல் நாள் வசூல்
இந்த நிலையில், முதல் நாள் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தலைவர் தம்பி தமையில் திரைப்படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 2+ கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சூப்பரான தொடக்கம் ஆகும்.
