ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படத்தின் இதுவரையிலான பாக்ஸ் ஆபிஸ் வசூல்...
தலைவர் தம்பி தலைமையில்
நடிகர் ஜீவா, தமிழ் சினிமாவின் சிறந்த நாயகனாக வலம் வந்தவர்.
ஆரம்பத்தில் நல்ல ஹிட் கொடுத்தாலும் இடையில் அவருக்கு பெரிய ரீச் கொடுக்கும் அளவிற்கு எந்த படமும் அமையவில்லை. அண்மையில் ஜீவாவின் நடிப்பில் தலைவர் தம்பி தலைமையில் என்ற படம் திரைக்கு வந்தது.
கொஞ்சம் தோல்விப்படங்களால் மார்க்கெட் இழந்து நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த ஜீவாவுக்கு திருப்புமுனையாக இப்படம் அமைந்துள்ளது.
மலையாள சினிமா இயக்குனர் நிதிஷ் சகதேவ் இந்த படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்
இந்த பொங்கலுக்கு விஜய்யின் ஜனநாயகன் ஸ்பெஷல் என்பதால் சில படங்கள் ரிலீஸை தள்ளி வைத்திருந்தனர்.
பின் ஜனநாயகன் தள்ளிப்போனதால் சட்டென சில படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது, அதில் ஒரு படமாக தலைவர் தம்பி தலைமையில் படம் ரிலீஸ் ஆனது. இப்படம் மொத்தமாக ரூ. 22 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.