தலைவி பட ரிலிஸில் வந்த பெரிய சிக்கல், குழுப்பத்தில் படக்குழு
கங்கனா ரன்வத் நடிப்பில் விஜய் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் தலைவி. இப்படம் செப்டம்பர் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவித்தனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வரவுள்ளது, இதில் தமிழ், தெலுங்கு டிஜிட்டல் ரைட்ஸ் அமேசானுக்கும், ஹிந்தி டிஜிட்டல் ரைட்ஸ் நெட்ஃப்ளிக்ஸுக்கும் கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் படம் ரிலிஸான 15வது நாள் அமேசானில் இப்படம் ப்ரீமியர் செய்ய அக்ரீமெண்ட் போட்டுள்ளதாகவும், இது தமிழக திரையரங்க உரிமையாளர்களுக்கு தெரிந்து அப்படி இருந்தால் படத்தை ரிலிஸ் செய்ய முடியாது என்று கூறியதகாவும் பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
அதோடு, அமேசான் நிறுவனமும் இனி எங்களால் அக்ரீமெண்டை மாற்ற முடியாது, வேண்டுமென்றால், படத்தை திருப்பி பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்ல படக்குழு செம்ம குழப்பத்தில் உள்ளதாம்.