பள்ளி பருவத்தில் இருக்கும் தளபதி 65 பட நடிகை பூஜா ஹெக்டேவை பார்த்துள்ளீர்களா - இதோ
மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி எனும் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.
முதல் படத்தின் தோல்வி காரணமாக நடிகை பூஜா ஹெக்டேவிற்கு அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனம் செலுத்திய நடிகை பூஜா ஹெக்டே தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து தற்போது தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாகியுள்ளார்.
மேலும் தற்போது தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மீண்டும் தமிழ் திரையுலகில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.
இந்நிலையில் நடிகர் பூஜா ஹெக்டே தனது பள்ளி பருவத்தில் எடுத்துக்கொண்ட க்யூட்டான புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..