தளபதி 65 படத்திலிருந்து வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம், முக்கிய படக்குழுவினர் வெளியிட்டது
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் பல்வேறு தடைகளுடன் வெளியாகியும் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்து ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் தளபதி 65 படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்து வருகிறது, சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது தளபதி 65 படத்தின் கலை இயக்குனர் கிரண் தளபதி 65 படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்ட புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.