நடிகர் விவேக் மறைந்த தினத்தில் தளபதி 65 படக்குழு செய்த விஷயம், இணையத்தில் பரவி வரும் செய்தி
பிரபல நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார், இதனால் அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சிக்கு உள்ளானது.
மேலும் தற்போது நடிகர் விவேக் மறைந்த தினத்தன்று தளபதி 65 படக்குழு செய்த விஷயம் குறித்த செய்தி இணையத்தில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.
ஆம், ஜார்ஜியாவில் நடந்து வந்த தளபதி 65 படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகர் விவேக் மறைந்த விஷயம் அறிந்த படக்குழு அன்று மொத்தமாக படப்பிடிப்பு பணிகளை நிறுத்திவிட்டார்களாம்.
அதுமட்டுமின்றி ஜார்ஜியாவில் அப்படத்தின் படப்பிடிப்பை முடித்த தளபதி விஜய் சென்னை திரும்பியுடன் நடிகர் விவேக்கின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினரிடம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.