பல வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு கதையில் விஜய் ! தளபதி 66 பட தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்..
தளபதி விஜய் தற்போது நடித்து முடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதனிடையே தளபதி விஜய் அடுத்து வம்சி இயக்கத்தில் தளபதி 66 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார், அப்படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் முதல் துவங்கும் என எதிர்க்கப்படுகிறது.
இந்நிலையில் தளபதி 66 படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேட்டிகளில் இப்படம் குறித்து பேசிவருகிறார்.
அதன்படி அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் "தளபதி 66 திரைப்படம் பேமிலி Entertainer-ஆக இருக்கும், விஜய் சார் பல வருடங்களுக்கு முன்பு பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் என குடும்ப திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த கதையை அவரிடமும் கூறியதும் பாராட்டினார், இப்படம் பாடல், ஆக்ஷன், எமோஷனல் உடன் Complete Package-ஆக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.