மீண்டும் தளபதி 66 படத்தில் நடிகர் விஜய் செய்யவுள்ள விஷயம் ! வெளியான புதிய அப்டேட்..
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தின் ஷூட்டிங்கும் மார்ச் மாதம் முதல் தொடங்கும் என கூறப்பட்டது.
இந்நிலையில் இப்படம் குறித்து தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கின்றன. அதன்படி தற்போது இப்படத்தில் தளபதி விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.
தளபதி விஜய்யின் சமீபத்திய புகைப்படங்களை பார்க்கும் போது அவர் இதில் வயதான தோற்றத்தில் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது. இதற்கு முன் விஜய் பிகில், மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்களில் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுத அச்சுறுத்தல், AI-ன் தீய பயன்பாடு... மனிதகுல அழிவிற்கு நாள் குறித்த ஆய்வாளர்கள் News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri