தளபதி 66 ஷூட்டிங்கின் முதல் புகைப்படத்தை வெளியிட்ட இசையமைப்பாளர் தமன் !
பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி 66
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படத்தை தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து வருகிறது. மேலும் படத்தின் முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருவதால் முதல் நாள் காலெக்ஷன் பெரியளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பீஸ்ட் படம் வெளியாகும் முன்பே தளபதி 66 படத்திற்கு ரெடியாகி உள்ளார் தளபதி விஜய். இன்று பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் புகைப்படங்கள் தான் காலையில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமன் வெளியிட்ட Exclusive புகைப்படம்
ராஷ்மிகாவுடன் தளபதி விஜய் எடுத்துக்கொண்ட கியூட்டான புகைப்படங்கள் அனைவரும் கவர்ந்துள்ளது என்றே கூறலாம். மேலும் தற்போது தளபதி 66 படத்தின் இசையமைப்பாளர் தமன் Exclusive புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஆம், படத்தின் முதல் ஷாட்டிற்காக பயன்படுத்தப்பட்ட கிளாப்-ன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி விஜய் நடித்த முதல் காட்சி பிரம்மிக்க வைத்ததாகவும் தமன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
What a Highhhhh ?♥️ at #Thalapathy66 Shoot today .
— thaman S (@MusicThaman) April 6, 2022
Wishing My dear brother @directorvamshi All the very Best ???❤️ The First Shot ON Our @actorvijay anna Was Mind Blowingggggggg ??? ?? . @Lyricist_Vivek thanks for the amazing writings dear brother .
God bless !! pic.twitter.com/aHPxevHHoM

திடிரென வெளியேற்றப்பட்ட ஒரு போட்டியாளர்! பிக் பாஸ் அல்டிமேட் இறுதி வாரத்தில் முதல் எலிமினேஷன்