தளபதி 66 படத்தில் விஜய்யுடன் இணையும் மாஸ் கூட்டணி.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
தளபதி விஜய் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்த வருடம் கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை முடித்துவிட்டு தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் தனது 66வது படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மகேஷ் பாபுவின் மகள் நடிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
அதே போல் மற்றொரு இப்படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி மற்றும் இசையமைப்பாளராக தமன் கமிட்டாகியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களுக்கு, பிரபு தேவா தான் நடன இயக்குனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய், பிரபு தேவாவின் இயக்கத்தில் இதுவரை இரு திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பதும், அதில் போக்கிரி திரைப்படம் மிகப்பெரிய மாஸ் ஹிட் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.