தளபதி 66-ல் விஜய்யுடன் நடிக்கும் தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகர் ! வெளியான புதிய தகவல்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய்யின் அடுத்த திரைப்படமான பீஸ்ட் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.
ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியாகியுள்ள அரபிக் குத்து பாடல் 90 மில்லியன் யூடியூப்-ல் பார்வைகளை குவித்து சாதனை படைத்துள்ளது.
இப்படத்தின் சிங்கிள் பாடலுக்குகே இவ்வளவு ஆதரவு கொடுத்துள்ள டீசருக்கு என்னென்ன சாதனைகளை செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதனிடையே பீஸ்ட் படத்தை தொடர்ந்த விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் Bilinguval திரைப்படமாக உருவாகவுள்ளது.
மேலும் தற்போது இப்படத்தில் நடிக்கவுள்ள முக்கிய நடிகர் குறித்து தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி இப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானியை இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.