தளபதி 66 திரைப்படம் குறித்த Exclusive தகவல்கள் ! யார் வில்லன், எப்போ ஷூட்டிங் எல்லாம் தெரியுமா?
தொடங்கிய தளபதி 66
தளபதி விஜயின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அவரின் அடுத்த திரைப்படமான தளபதி 66 படத்தின் தற்போது அனைவரின் பார்வை திரும்பியுள்ளது.
ஆம், அதன்படி நேற்று இப்படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மற்றும் இசையமைப்பாளர் SS தமன் பணிபுரிய உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
அதனை தொடர்ந்து இன்று தளபதி 66 பட பூஜையும் நடைபெற்று முடிந்துள்ளது, அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் செம வைரல்.

வைரலான போட்டோஸ்
மேலும் தளபதி 66 படத்திற்காக கோகுலம் ஸ்டுடியோஸில் பிரம்மாண்ட செட் ஒன்றை அமைத்துள்ளார்களாம், அதில் தான் முதற்கட்ட படப்பிடிப்பு நடக்கவுள்ளது, பத்து நாட்கள் நடைபெறவுள்ள அந்த செட் தான் பீஸ்ட் ஷூட்டிங்கும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
மாஸ்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களிலும் நடிகை ராஷ்மிகாவை கதாநாயகி நடிக்க வைக்க முயற்சிகள் நடந்ததாம், ஆனால் இந்த கூட்டணி தள்ளிப்போக, புஷ்பா ஹிந்தி படங்களை தொடர்ந்து தளபதி 66 படத்திற்கு தேதி ஒதுக்கியுள்ளார் ராஷ்மிகா.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான சரத் குமாரும் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளது, பூஜை அவர் கலந்து கொண்டதன் மூலம் தான் தெரியவந்துள்ளது. அவர் இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தளபதி 66 பட பூஜையின் போது நடிகை ராஷ்மிகா செய்த விஷயம் ! வைரல் போட்டோஸ்..