மீண்டும் தளபதி 66 படத்தில் நடிகர் விஜய் செய்யவுள்ள விஷயம்! வெளியான புதிய அப்டேட்..

Vijay Thalapathy 66
By Jeeva Jan 07, 2022 07:50 AM GMT
Report

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

அந்த வகையில் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படமும் வசூலில் புதிய சாதனைகளை படைக்க தயாராகவுள்ளது.

இதனிடையே பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தளபதி 66 படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி தளபதி விஜய் இதில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் பிகில் திரைப்படத்தில் தளபதி விஜய் அப்பா, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US