தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கப்போவது இந்த முன்னணி நடிகர் தானா..? அவர் ரொம்ப பிசியான நடிகர் ஆச்சே
பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தை நடிக்கவுள்ளார்.
தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சி முதல் முறையாக நடிகர் விஜயுடன் இணையும் இப்படத்தை தில் ராஜு தாயாருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, நேற்று சர்ப்ரைஸாக வெளியானது.
ஆனால், இதுவரை இப்படத்திற்கு இசையமைக்க போவது யாரென்று தெரியவில்லை. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனா நடிக்க, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக இணையத்தில் கூறப்படுகிறது.
ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஏனென்றால், தெலுங்கில் தற்போது பிசியான கதாநாயகனாக இருக்கும் நடிகர் நானி, வில்லனாக நடிக்க ஓகே சொல்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
