தளபதி 66 படத்தில் நடிப்பதை உறுதி செய்த, பிளாக் பஸ்டர் விஜய் பட வில்லன்!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தெலுங்கில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ள வம்சி தளபதி விஜய்யை வைத்தும் பிளாக் பஸ்டர் படத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதை தளபதி விஜய்யின் பிளாக் பஸ்டர் வில்லன் நடிகர் ஒருவர் உறுதி செய்துள்ளார்.
ஆம், நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டியொன்றில் அடுத்து அவர் விஜய்யின் படத்தில் நடிப்பதாக கூறியுள்ளார். அதன்படி அவர் தளபதி 66 நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
விஜய் மற்றும் பிரகாஷ் ராஜ் காம்போவில் கில்லி, போக்கிரி, சிவகாசி என பல பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri