விஜய்யின் 66வது படத்தின் இசையமைப்பாளராக இவரா?- திடீரென வைரலாகும் செய்தி
விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
படத்திற்கான படப்பிடிப்பு வெளிநாடு, சென்னை என மாற்றி மாற்றி நடக்கிறது, அடுத்தகட்டமாக படம் குறித்து ஏதாவது தகவல் வருமா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்.
இப்பட தகவலை ரசிகர்கள் எதிர்ப்பார்க்க தனது அடுத்த படத்தை தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கப்போவதாகவும், தில் ராஜு தயாரிக்க இருப்பதாக இன்ப செய்தி அறிவித்தார்.
அதன்பிறகு படம் குறித்து எந்த தகவலும் இல்லை. இயக்குனர் வம்சி மட்டும் ஒரு பேட்டியில், படம் அரசியல் சம்பந்தப்பட்ட கதை எதுவும் இல்லை, வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என கூறியிருந்தார்.
அந்த நாட்களுக்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். இந்த நேரத்தில் தான் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் தான் இருக்கும், அவரது பிறந்தநாளான இன்று செய்தி உறுதி என்றால் அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது.