பீஸ்ட் ரிலீஸ் முன்பே விஜய்யின் 66வது பட பூஜை போடப்பட்டது, வெளிவந்த புகைப்படங்கள்
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
நெல்சன் இயக்கியிருக்கும் இப்பட கதை என்னவென்றால் ஒரு பெரிய மால்லை தீவிரவாதிகள் கைப்பற்ற அதில் சிக்கிக் கொண்ட மக்களை விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதையாக இருக்கிறது.
இது கடந்த ஏப்ரல் 2ம் தேதி வெளியான டிரைலரில் நன்றாக தெரிய வந்தது.
பட ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க எதிர்ப்பார்ப்பும் அதிகமாகி வருகிறது, புக்கிங் எல்லா இடத்திலும் படு வேகமாக நடக்கிறது.
அடுத்த பட பூஜை
பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அடுத்த பட பூஜையை இன்று போட்டுள்ளார் விஜய். வம்சி இயக்கும் விஜய்யின் 66வது படத்தை தில் ராஜு தயாரிக்க நடிகை ரஷ்மிகா நாயகியாக நடிக்கிறார்.
இன்று பூஜை போடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ,