தொடங்கப்படாத விஜய்யின் 66வது படத்தை இத்தனை கோடி வாங்க பேச்சு வார்த்தையா?- முக்கிய தகவல்
இளைய தளபதி விஜய் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். விஜய் படம் வருகிறதா அப்போது தமிழ்நாட்டில் திருவிழா தான் என்று எல்லோரும் கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள்.
அந்த அளவிற்கு மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்திருக்கிறார். இளம் இயக்குனர் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்துவரும் விஜய் அடுத்த படத்திற்கான இயக்குனர், தயாரிப்பாளரை ஏற்கெனவே தேர்வு செய்துவிட்டார்.
தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ள வம்சி இயக்கத்தில் தான் விஜய் தனது 66வது படத்தில் நடிக்க இருக்கிறார், அந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தான் தயாரிக்கிறார்.
இவர்கள் இணைகிறார்கள் என்ற அறிவிப்பு மட்டும் தான் இதுவரை வந்துள்ளது, அதற்குள் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை பெற முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டி போடுகிறார்களாம்.
ரூ. 200 கோடி கொடுத்து சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் வாங்க முக்கிய நிறுவனம் முன்னணியில் இருக்ப்பதாக கூறப்படுகிறது.