தளபதி 66 படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த புகைப்படம்.. யார்யாரெல்லாம் இருக்கிறார்கள் பாருங்க
விஜய்யின் தளபதி 66
வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் தளபதி 66. தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார்.
ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார்கள்.
மேலும், தமன் இசையில் இப்படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. அதில் ஏற்கனவே மூன்று பாடல்களை இசையமைத்துவிட்டதாக அவரே கூறியுள்ளார்.

படப்பிடிப்பு புகைப்படம்
இந்நிலையில், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தில் சரத்குமார் மற்றும் மனோபாலா இருவரும் இருக்கிறார்கள். இந்த புகைப்படத்தை பார்க்கும்பொழுது இப்படத்தில் சரத்குமார் காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார் என்று தெரிகிறது.

ஒரு பக்கம் இது தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் என்று கூறி வர, மற்றொரு புறம் இது வேறொரு படத்தின் படப்பிடிப்பு என்றும் கூறப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் சிங்கர் பிரகதியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இருவரும் இணைந்து ஆடிய நடன வீடியோ இதோ