பிரபலமான இடத்திற்கு சென்ற விஜய்யின் 66வது படக்குழு- யாரெல்லாம் இருக்காங்க பாருங்க
நடிகர் விஜய், நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் எல்லாம் வெளியாகிவிட்டது. அடுத்தடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க படக்குழுவோ படப்பிடிப்பில் செம பிஸியாக உள்ளனர்.
இந்த நேரத்தில் தான் விஜய் தனது 66வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது விஜய் தனது அடுத்த படத்தில் தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
அந்த புதிய படத்தை தில் ராஜு தயாரிக்க இருக்கிறார், அந்த அதிகாரப்பூர்வ தகவலும் அண்மையில் வெளியானது.
அறிவிப்பு வெளியான சந்தோஷத்தில் விஜய்யின் 66வது பட இயக்குனர் வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள்,