காதலர் தினத்தில் வெளியாகவுள்ள தளபதி 66 படத்தின் அப்டேட் ! இணையத்தில் பரவி வரும் தகவல்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தற்போது தளபதி 66 குறித்த அப்டேட்டுகள் தான் தொடர்ந்து இணையத்தில் பரவி வருகிறது.
அதன்படி சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தளபதி 66 குடும்ப திரைப்படமாக இருக்கும் என்றும் பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு இது போன்ற படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக தில் ராஜு தெரிவித்து இருந்தார்.
மேலும் தற்போது தளபதி 66 படத்தில் நடிக்கும் நாயகி குறித்து வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தில் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.