தளபதி 67 திரைப்படத்திற்காக சம்பளத்தை குறைத்து கொண்ட நடிகர் விஜய்! எத்தனை கோடி தெரியுமா?
விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
அதன்படி இயக்குநர் வம்சி இயக்கத்தில் அவர் நடித்துள்ள திரைப்படம் வாரிசு, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாகயிருக்கிறது.
மேலும் தற்போது ரசிகர்கள் இப்படத்தின் அடுத்த அப்டேட்டை தான் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர். அதன்படி அடுத்த வாரம் இப்படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
தளபதி 67
இந்நிலையில் வாரிசு திரைப்படத்திற்கு பின் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் இன்னும் அதிகாரபூர்வமாக அப்படம் அறிவிக்கப்படமால் இருக்கிறது.
மேலும் தற்போது அப்படத்திற்காக விஜய் தனது சம்பளத்தை குறைத்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி ரூ. 130 கோடியில் இருந்து 5 கோடியை குறைத்து கொண்டு 125 கோடியை அவர் சம்பளமாக வாங்கியிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
