தளபதி 67 படத்தில் ரோலக்ஸ்? அவரே கொடுத்த ஹிண்ட்.. சந்தோசத்தின் உச்சத்தில் ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ்
இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார்.
பல முன்னணி ஹீரோக்கள் லோகேஷ் படத்தில் நடிக்க வேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்து வந்த நிலையில். விஜய்யின் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகிறார் என அறிவித்தனர். மேலும் இந்த படம் LCU-வில் இருக்குமா என கேள்வி எழுந்திருக்கிறது.
இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருகிறார்கள். இதற்கு முன்பு இருவரின் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

ரோலக்ஸ்
த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக தளபதி 67ல் நடிக்க போகிறார் பல தகவல்கள் வந்து கொண்டுயிருக்கிறது. இது குறித்து த்ரிஷாவிடம் பேட்டியின் போது கேட்டுள்ளனர். "இதற்கு நான் அடுத்த வருடம் பதில் அளிக்கிறேன். சிறிது காலம் காத்திருங்கள்" என்று பதில் அளித்துள்ளார். இவர் பேசிய வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த வீடியோவை நடிகர் சூர்யா லைக் செய்துவிட்டு, சிறிது நேரத்திலேயே அதை unlike செய்துவிட்டார். இதனால் சூர்யா விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் வந்தது போல தளபதி 67 படத்திலும் வர போகிறார் என்று இணையத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

தற்போது வரை ப்ரிதிவி ராஜ், மன்சூர் அலி கான், கவுதம் மேனன் போன்ற பிரபலங்கள் தளபதி 67 படத்தில் நடிக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது.

அட அழகிய நடிகை கோபிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் உள்ளார்களா? லேட்டஸ்ட் க்ளிக்