தளபதி 67ல் இது மட்டும் இருக்காது.. கசிந்த லேட்டஸ்ட் தகவல்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்து தளபதி விஜய் உடன் கூட்டணி சேர்கிறார்.
தளபதி 67
விஜய்யின் 67வது படமான இதற்கான கதை எழுதும் பணிகளில் அவர் இறங்கி இருப்பதால் தற்போது சமூக வலைத்தளங்களில் இருந்தும் விலகி இருக்கிறார்.
இயக்குனர் ரத்னகுமார் உடன் சேர்ந்து இப்போது தளபதி67 முதற்கட்ட பணிகளை செய்ய மும்முரமாக இறங்கி இருக்கிறார் லோகேஷ்.
முழு ஆக்ஷன் திரில்லர்
தளபதி 67 படம் பற்றி சில தகவல்கள் கசிந்து இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் கதையாக தான் இருக்குமாம்.
மேலும் இதில் ஒரு பாடல் கூட இருக்காது எனவும் கூறப்படுகிறது. லோகேஷின் இயக்கத்தில் முன்பு வந்த கைதி படத்திலும் ஒரு பாடல் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபலங்கள் மணிரத்னம், சுஹாசினியின் ஒரே மகன் நந்தனை பார்த்துள்ளீர்களா? இதோ அவரது புகைப்படம்