லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67.. உறுதி செய்த முன்னணி நடிகர்
தளபதி 67
வாரிசு படத்திற்கு பின் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தொடர்ந்து பல செய்திகள் வெளிவருகிறது.
லோகேஷ் கனகராஜிடம் இதைப்பற்றி கேட்கும் போதெல்லாம், படக்குழு தரப்பிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறிவிடுகிறார்
அண்மையில் தனது அடுத்த படத்தின் அறிவிப்புடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு, ட்விட்டர் பக்கத்தில் தற்காலிகமாக வெளியேறியுள்ளார்.
ஏறக்குறைய விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படத்தில் நடிப்பவர்கள் குறித்து தொடடர்ந்து தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது.
இப்படத்தில் மொத்தம் 6 வில்லங்கள் என்றும், அதில் பிரித்விராஜ் மற்றும் சஞ்சய் தத் தேர்வாகியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. அதே போல், நடிகைகள் திரிஷா, சமந்தா இருவரும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
உறுதி செய்த நடிகர்
இந்நிலையில், ஆவலுடன் தளபதி 67 படத்தின் அறிவிப்பிற்காக காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், நடிகர் கார்த்தி விருமன் படத்தின் ப்ரோமோஷன் பிரஸ் மீட்டில் லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் தளபதி 67 திரைப்படம் உருவாகிறது என்று உறுதியாக கூறிவிட்டார்.
தளபதி 67 படத்தை முடித்த கையோடு அடுத்ததாக கைதி 2 படப்பிடிப்பு துவங்கவுள்ளது என்றும் கார்த்தி தெரிவித்துள்ளார். இதன்முலம், தளபதி 67 படத்தின் கூட்டணி உறுதியாகியுள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம் எப்போது தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அறிவிப்பு வெளியாகிறது என்று.