மாஸ்டர், விக்ரம் படங்களை தொடர்ந்து தளபதி 67 படத்திலும் இவரா! வெளியான புதிய அப்டேட்
தளபதி 67 அப்டேட்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் டாப் இயக்குநராகியுள்ளார். இவர் இயக்கத்திள் வெளியான அனைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.
மேலும் சமீபத்தில் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மக்களிடையே பேரதாரவை பெற்று தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான நான்காவது திரைப்படமே இவ்வளவு பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது, கோலிவுட் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. மேலும் அடுத்து லோகேஷ் விஜய்யின் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
தளபதி 67 திரைப்படமாக உருவாகவுள்ள அப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, தளபதி விஜய்யின் பிறந்தநாளில் அப்பட அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாரிசு திரைப்படத்தின் போஸ்டர்கள் மட்டுமே வெளியானது.
இந்நிலையில் தற்போது அப்படத்தில் பணியாற்றவுள்ள முக்கிய பிரபலம் குறித்த தகவல் வந்துள்ளது. ஆம் இப்படத்தில் இயக்குநர் ரத்னகுமார் திரைகதை எழுதவுள்ளார். ஏற்கனவே அவர் இயக்குநர் லோகேஷ் உடன் கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலை தொடர்ந்து Comeback கொடுத்த இயக்குநர் ஹரி ! யானை திரைப்படத்திற்கு குவியும் சிறந்த விமர்சனங்கள்..

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
