இன்னும் ஷூட்டிங் கூட தொடங்காத நிலையில் தளபதி 67 படத்தை வாங்க முந்திய பிரபல நிறுவனம் !
தளபதி விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் விஜய்யுடன் ஏகப்பட்ட முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
மேலும் விறுவிறுப்பாக நடந்து வரும் அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டி வீடியோ தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. அதன்படி நேற்று கூட முக்கிய நடிகர்களுடன் விஜய் நடித்துள்ள காட்சியில் வீடியோ வெளியானது.
67 படத்தின் அப்டேட்
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படமாக உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் அப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.
மேலும் நேற்று அப்படத்தின் திரைக்கதையில் பணியாற்றி வரும் இயக்குநர் ரத்னகுமார், இயக்குநர் லோகேஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு குட்டியான 67 அப்டேட்டை கொடுத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது தளபதி 67 படத்தின் OTT உரிமத்தை Netflix நிறுவனம் வாங்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமந்தா - சித்தார்த் இடையேயான காதல்! திருமண பூஜை வரை சென்றதா?

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
