தளபதி 67 படத்தின் அடுத்த அப்டேட்.. வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள்
விஜய் - லோகேஷ் கூட்டணி
விஜய் நடிப்பில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் முற்றலும் மாறுபட்ட ஒரு விஜய்யை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காட்டியிருந்தார்.
இப்படம் மாபெரும் வெற்றியை பெற்று வசூலில் பல சாதனைகளையும் படைத்தது. மாஸ்டர் வெற்றிக்குபின் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் எப்போது இணைவார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
தளபதி 67 விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் LCU-வாக இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்க்ரீனிடம் இருக்கும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா கமிட்டாகியுள்ளார் என்று சில நாட்களுக்கு முன் செய்தி வெளிவந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கப்போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே லோகேஷ் - விஜய் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் படத்திற்கு அனிருத் தான், இசையமைத்திருந்தார். மேலும் சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.