படத்திற்கு பூஜையே போடவில்லை.. ஆனாலும் 150 கோடி வசூல்.. விஜய் மாஸ்
தளபதி 67
விஜய் நடிப்பில் அடுத்ததாக தளபதி 67 உருவாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்த்து தான் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இப்படத்தில் சஞ்சய் தத், விஷால், திரிஷா உள்ளிட்டோர் கமிட்டாகியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகானும் இப்படத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
100 கோடியை கடந்த பிஸ்னஸ்
இந்நிலையில், பூஜை கூட போடாத இப்படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ் ரூ. 160 கோடிக்கு தளபதி 67 படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது மிகப்பெரிய சாதனை என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் குறைவான விலைக்கு விற்றுப்போன துணிவு.. அஜித் படத்திற்கு இப்படியொரு நிலைமையா