லோகேஷ் இயக்க விஜய் நடிக்கப்போகும் 67வது படம் இப்படிபட்ட கதையா?
விஜய் அடுத்தடுத்து படங்கள் நடித்து தனது ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துக் கொண்டே இருப்பவர். இந்த வருடம் அவரது நடிப்பில் நெல்சன் இயக்க பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.
படம் பெரிய அளவில் வசூல் சாதனை செய்யும் என்று பார்த்தால் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அப்படியே வசூலில் டல் அடித்தது, பல இடங்களில் விநியோகஸ்தர்களுக்கு படம் நஷ்டத்தை கொடுத்துள்ளது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் தெலுங்கு சினிமா இயக்குனர் வம்லி இயக்கத்தில் ஒரு புதிய படம் நடிக்கிறார், படத்திற்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்புகள் அமைதியாக நடக்கிறது, இதில் நாயகியாக ரஷ்மிகா நடிப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

விஜய்யின் 67வது படம்
இந்த தனது 66வது படத்தை முடித்த கையோடு மாஸ்டர் பட கூட்டணியாக மீண்டும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தான் நடிக்கிறாராம். இப்படத்தின் கதையை லோகேஷ் மாநகரம் படத்தை முடித்த கையோடு எழுதியதாம்.
இது ஒரு கேங்ஸ்டர் கதை என கூறப்படுகிறது.
ஹீரோ போல் நன்றாக வளர்ந்திருக்கும் சிம்ரனின் முதல் மகன்- லேட்டஸ்ட் க்ளிக்