நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 67 தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட போஸ்டர் ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..
பிறந்தநாளை முன்னிட்டு வெளியான போஸ்டர்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய் இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் என்னதான் கடும் விமர்சனங்களை சந்திதாலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலை குவித்திருந்தது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது திரைப்படத்தில் நடித்தி வருகிறார். அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வரும் ஜுன் 22 ஆம் தேதி விஜய் தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் CDP எல்லாம் வெளியிட்டு நேற்றிலிருந்து கொண்டாட்டம் தொடங்கியது.
மேலும் தளபதி 67 படத்தை இயக்குநர் லோகேஷ் இயக்கவுள்ளதாகவும் அதனை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க இருப்பதாகவும் தகவல் பரவி வந்தன. ஆனால் இந்த கூட்டணியின் அறிவிப்பு வரும் ஜுன் 22 வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தற்போது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்தை தெரிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதை கண்ட ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
தளபதியின் நாளைய தீர்ப்பு முதல் மக்களின் இன்றைய தீர்ப்பு வரை ?♥️
— Seven Screen Studio (@7screenstudio) June 19, 2022
Presenting you all the #ThalapathyBirthdaySpecialPoster ?
Advance birthday wishes to our dear most #Thalapathy @actorvijay Sir ?♥️ pic.twitter.com/c8sLsUptSy
லோகேஷ் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்குமாம், செம்ம மாஸ்
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu