தளபதி 67 டைட்டில் இதுதானா? லோகேஷ் கனகராஜா இப்படி டைட்டில் வைத்தது
நடிகர் விஜய் வாரிசு படத்தை முடித்தபிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன் 67வது படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்காக முதற்கட்ட பணிகளை லோகேஷ் தற்போது செய்து வருகிறார். படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் மாதங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விக்கிபீடியா பக்கத்தில் இந்த படத்திற்கு நான் வாழும் உலகம் என பெயரிடப்பட்டு இருப்பதாக தகவல் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் தனது படங்களுக்கு ஒற்றை வார்த்தையில் தான் இதுவரை டைட்டில் வைத்து வந்திருக்கிறார். அதனால் இந்த செய்தி உண்மைதானா என்கிற குழப்பமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.
இருப்பினும் விக்கிபீடியா பக்கத்தை யார் வேண்டுமானாலும் எடிட் செய்யலாம் என்பதால், இந்த தகவல் உண்மையாக இருக்க வாய்ப்புகள் குறைவு தான்.
